×

நடப்பு நிதியாண்டில் உர மானியம் ரூ.1.8 லட்சம் கோடி: ஒன்றிய அமைச்சர் கணிப்பு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ‘‘நடப்பு நிதியாண்டில் யூரியா இறக்குமதி 40 முதல் 50 லட்சம் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட 75 லட்சம் டன்களை விட குறைவு. உள்நாட்டு உற்பத்தி மற்றும் நானோ திரவ யூரியாவின் பயன்பாடு அதிகரித்ததன் மூலம் யூரியா இறக்குமதி குறைந்துள்ளது. மேலும், உலகளாவிய விலை வீழ்ச்சி காரணமாக நடப்பு ஆண்டில் உர மானியம் 30 முதல் 34 சதவீதம் குறைந்து, ரூ.1.7 முதல் 1.8 லட்சம் கோடியாக இருக்கும். கடந்த நிதியாண்டில் மானியத் தொகை ரூ.2.56 லட்சம் கோடியாக இருந்தது. நாட்டில் உரத்தட்டுப்பாடும் இல்லை’’ என்றார்.

The post நடப்பு நிதியாண்டில் உர மானியம் ரூ.1.8 லட்சம் கோடி: ஒன்றிய அமைச்சர் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Union minister ,New Delhi ,Delhi ,Mansukh Mandaviya ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி